வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 8 நவம்பர் 2023 (17:08 IST)

''டெஸ்ட், ஒருநாள், டி-20 ''என அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இந்தியா முதலிடம்!

Indian Team
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வரும்  நிலையில் இத்தொடரில் இந்திய அணி 8 போட்டிகளில் வென்று  16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.    இந்த நிலையில் ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.

அதன்படி, பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமை பின்னுத் தள்ளி சர்வதேச கிரிக்கெட்டில் 830 ரேட்டிங் புள்ளிகளுடன்  இந்திய பேட்ஸ்மேன் சுப்மன் கில்  முதலிடம் பிடித்துள்ளார்.  இந்திய அளவில் சச்சின், தோனி, விராட் கோலி ஆகியோருக்குப் பிறகு முதல் இடத்திற்கு முன்னேறிய 4வது வீரர் என்ற சாதனை படைத்தார் சுப்மன் கில்.

இப்பட்டியலில் இந்திய வீரர் கோலி 4 வது இடமும், ரோகித் சர்மா 5 வதும் இடமும் பிடித்துள்ளனர்.

அதேபோல் ஒரு நாள் போட்டிகளுக்கான ஐசிசி வுலர்களுக்கான தரவரிசை பட்டியலில்  சிராஜ் முதலிடம் பிடித்தார். 

மேலும், ரோஹித் சர்மா   தலைமையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா முதலிடம்  பிடித்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்களில் அஸ்வின் முதலிடமும், ஆல்ரவுண்டர்களில்  ரவீந்தர ஜடேஜா முதலிடமும் பிடித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் படியலில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.  டி 20 கிரிக்கெட்டில் ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி  முதலிடமும், பேட்ஸ்மேன்களில் சூர்யகுமார் முதலிடம் பிடித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.