திங்கள், 19 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (08:02 IST)

உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்… இந்தியாவுடன் மோதும் இரண்டு அணிகள்!

உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்… இந்தியாவுடன் மோதும் இரண்டு அணிகள்!
50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடக்க உள்ளது. இந்த முறை முழு உலகக் கோப்பை தொடரும் இந்தியாவிலேயே நடக்கிறது. இந்த தொடருக்கான முதல்கட்ட அணிகளை செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு முன்னதாக 15 பேர் கொண்ட அணிகளை அறிவிக்க வேண்டும்.

உலகக் கோப்பை அட்டவணைகளில் சிறிய மாறுதல்களை ஐசிசி சமீபத்தில் செய்தது. இந்நிலையில் இப்போது பயிற்சி ஆட்டங்களுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை செப்டம்பர் 30 ஆம் தேதி கவுகாத்தியிலும்,  நெதர்லாந்து அணியுடனான பயிற்சி ஆட்டத்தை அக்டோபர் 3 ஆம் தேதி திருவனந்தபுரத்திலும் விளையாடுகிறது.  உலகக் கோப்பை தொடரில் முதல் ஆட்டத்தை ஆஸி அணியை எதிர்த்து அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் விளையாடுகிறது இந்திய அணி.