1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (07:27 IST)

உலகக் கோப்பை தொடரை இலவசமாகக் காணலாம்… அறிவித்த பிரபல ஓடிடி!

இந்தியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் அக்டோபர் 14 ஆம் தேதி நடக்க உள்ளது. இப்போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் இந்த முறை கோப்பையை வெல்லும் அணிகள் எவை என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலர் ஆருடம் சொல்லி வருகின்றனர். இதில் பெரும்பாலான வீரர்களின் தேர்வு இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளாகதான் உள்ளன.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் பயனர்கள் இலவசமாகக் காணலாம் என டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அறிவித்துள்ளது. அதே போல ஆசியக் கோப்பை தொடரையும் டிஸ்னியில் இலவசமாக பார்க்கலாம் என அறிவித்துள்ளது.