1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India Vs Srilnaka last T20 match on today

தொடரை கைப்பற்றுமா இந்தியா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Cricket
இலங்கையுடனான கடைசி டி20 ஆட்டம் இன்று நடைபெறவிருக்கும் நிலையில் ரசிகர்கள் இந்தியாவின் வெற்றியை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இலங்கை – இந்தியா இடையேயான மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் ஆட்டத்தின் போது மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் மீதமுள்ள இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா வென்றால்தான் தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலை உருவானது.

இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா இன்று தனது மூன்றாவது ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த ஆட்டத்திலும் வென்றால் மட்டுமே இந்தியா தொடரை கைப்பற்ற முடியும். 2020ம் ஆண்டு தொடங்கி இதுதான் இந்தியாவின் முதல் போட்டி என்பதால் ரசிகர்கள் இந்தியாவின் வெற்றியை ஆவலோடி எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தோனி விரைவில் ஓய்வு - ரவி சாஸ்திரி அதிர்ச்சி கருத்து !