ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 9 ஜனவரி 2020 (22:08 IST)

தோனியின் ஓய்வு குறித்து ரவிசாஸ்திரி முக்கிய தகவல்!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை, தோனி விரைவில் அறிவிப்பார் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளதால் தோனி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
தோனி ஓய்வு குறித்து அவரிடம் தான் சமீபத்தில் பேசியதாக கூறிய ரவி சாஸ்திரி, தோனி அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் திறம்பட விளையாடியுள்ளார் என்றும் புகழாரம் சூட்டினார். மேலும் தோனியின் வயது அதிகமாகிவிட்டதால் அவர் இந்த வயதில் தோனி டி20 கிரிக்கெட்டை மட்டுமே விளையாட வேண்டும். எனினும் வர உள்ள ஐபிஎல் தொடரில் விளையாடும்போது, அவரது உடல் எப்படி ஒத்துழைக்கிறது என்பதையும் கவனத்தில் கொண்டு அவராகவே ஒரு நல்ல முடிவை எடுப்பார் என்றும் தெரிவித்தார்.
 
தோனி தானாக அணியில் இடம் கேட்க மாட்டார் என்றும் தேர்வுக்குழுவினர் தேர்வு செய்தால் மட்டுமே அவர் அணியில் இடம்பெறுவார் என்றும் தோனியை பற்றி எனக்கு நன்றாக தெரியும் ரவிசாஸ்திரி மேலும் கூறியுள்ளார். எனவே ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி தோனி தனது திறமை மீண்டும் நிரூபித்தால் அவர் டி20 அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.