வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2022 (19:17 IST)

பாஜகவில் இணைந்த முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்....

Amarinder Singh
பஞ்சாப்  மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

சமீபத்தில் 117 தொகுதிகள் கொண்ட  பஞ்சாப் மா நிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில்  ஆம் ஆத்மி கட்சி 91 இடங்களில்  வெற்றி பெற்றது.

ஆளும் கட்சியான காங்கிரஸ் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

காங்கிரஸிலிருந்து விலகிய  முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்,  பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கி இத்தேர்தலில் போட்டியிட்ட  அவர், தான் போட்டியிட்ட பட்டியாலா தொகுதியில் தோல்வியை தழுவினார்.

இந்த நிலையில், தற்போது,. பஞ்சாப் மா நிலத்தில் பகவன் சிங் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வரும் நிலையில், முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்  பாஜகவில் இணைந்து, தன் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும்  பாஜகவுடன் இணைத்துக் கொண்டார்.