49 ஓவருக்கு மொத்த விக்கெட்டும் காலி.. 214 இலக்கு! – சாதிக்குமா இலங்கை?
ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதி வரும் நிலையில் இலங்கை அணிக்கு 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா – இலங்கை அணிகள் மோதிக் கொள்கின்றன. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா சிறப்பான ஆட்டத்தை ஆரம்பத்தில் வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா சரமாரியாக பவுண்டரிகளை விளாசி அரை சதத்தை எடுத்தார். ஆனால் சுப்மன் கில் விக்கெட்டிற்கு பிறகு இந்தியாவின் பேட்டிங் சுணக்கம் காண தொடங்கியது.
அடுத்தடுத்து விராட் கோலி, ரோகித் சர்மாவின் விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட கே.எல்.ராகுல், இஷான் கிஷன் பொறுமையான ஆட்டத்தால் கொஞ்சம் ரன்களை எடுத்தனர். இடையே மழை குறுக்கிட்டு பின் ஆட்டம் தொடங்கிய நிலையில் 49.1 ஓவர்களில் மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்களை இந்தியா பெற்றது.
இந்நிலையில் தற்போது 214 என்ற இலக்குடன் இலங்கை களத்தில் இறங்குகிறது. இந்த போட்டியிலும் இந்தியா வென்று இறுதி போட்டிக்குள் நுழையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Edit by Prasanth.K