1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (15:44 IST)

ஆசிய கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்தியா அதிரடி முடிவு..!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தானை இந்தியா பந்தாடியது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது 
 
இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ள நிலையில் சற்றுமுன் வரை இந்திய அணி 9 ஓவர்களில் விக்கெட் இழப்பில்லை 49 ரன்கள் எடுத்துள்ளது. 
 
தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் 18 ரன்களும் ரோஹித் சர்மா 23 ரன்களும் எடுத்துள்ளனர். இன்றைய போட்டியில் இந்தியா வென்று விட்டால் புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகள் பெற்று விடும் என்றும்  இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva