1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. India lost early 3 wickets in fourth innings

அடுத்தடுத்து மூன்று விக்கெட்களை இழந்து சொதப்பும் இந்தியா…!

ரிஷப் பண்ட்
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பேட் செய்தது.

இந்திய சுழல்பந்து வீச்சாளர்களான அக்ஸர் படேல் மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகியோரின் சுழல் தாக்குதலால நிலைகுலைந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜடேஜா ஐந்து விக்கெட்களும், அக்ஸர் படேல் நான்கு விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினர். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 264 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பாக அதிரடியாக ஆடிய பண்ட் 59 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். ஷுப்மன் கில் 90 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தைத் தவறவிட்டார். 

இதையடுத்து இரண்டாம் இன்னிங்ஸை ஆடிய நியுசிலாந்து அணி 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் வீழ்த்திய ஜடேஜா இரண்டாவது இன்னிங்ஸிலும் 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். இதனால் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 147 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த எளிய இலக்கை நோக்கி நான்காவது இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி அடுத்தடுத்து ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து சொதப்பியுள்ளனர். தற்போது இந்திய அணி 18 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
IND vs NZ Test: கடைசி டெஸ்ட்டும் கோவிந்தா.. இந்தியாவை வாஷ் அவுட் செய்த நியூசிலாந்து!