ஞாயிறு, 8 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 2 நவம்பர் 2024 (13:31 IST)

ஷுப்மன் கில் & ரிஷப் பண்ட்டின் சிறப்பான ஆட்டத்தால் 28 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா… !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியில் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பேட் செய்தது.

முதலில் நிதானமாக ஆடிய நியுசிலாந்து அணி இந்திய சுழல்பந்து வீச்சாளர்களான அக்ஸர் படேல் மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகியோரின் சுழல் தாக்குதலால நிலைகுலைந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜடேஜா ஐந்து விக்கெட்களும், அக்ஸர் படேல் நான்கு விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினர்.

இதையடுத்து முதல் நாள் ஆட்டமுடிவின் போது இந்திய அணி 80 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதையடுத்து இரண்டாம் நாளில் ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக ஆடிய பண்ட் 59 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். ஷுப்மன் கில் 90 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தைத் தவறவிட்டார். இந்நிலையில் இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 264 ரன்கள் சேர்த்து 28 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.