வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 14 ஜூன் 2018 (18:19 IST)

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 347/6

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 347/6 ரன்கள் எடுத்துள்ளது.
 
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
 
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஷிகர் தவான் (108) மற்றும் முரளி விஜய் (107) சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். லோகேஷ் ராகுல் (54) அரை சதம் அடித்தார்.
 
இந்நிலையில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 78 ஓவர்களில் 6 வீக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்துள்ளது. பாண்ட்யா 10 ரன்களுடனும், அஷ்வின் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.