வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 14 ஜூன் 2018 (16:41 IST)

பெங்களூரு டெஸ்ட் போட்டி: சதம் அடித்தார் முரளி விஜய்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் முரளி விஜய் சதம் அடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
 
அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் முரளி விஜய் சிற்ப்பாக விளையாடினர். தவான் 107 ரன்கள் அடித்த நிலையில் அகமதுசை பந்தில் ஆட்டமிழந்தார்.
 
இதன் பின்னர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மற்றொரு துவக்க வீரர் முரளி விஜய் சதம் அடித்துள்ளார். தற்போது இந்திய அணி 1 வீக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்துள்ளது.