திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 14 ஜூன் 2018 (12:42 IST)

சதம் அடித்து ஆட்டமிழந்த தவான்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி துவக்க வீரர் ஷிகர் தவான் சதம் அடித்து ஆட்டமிழந்துள்ளார்.
 
டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான அந்தஸ்த்தை பெற்ற ஆப்கானிஸ்தான் அணி ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இன்று இந்திய அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை துவங்கியது. 
 
இந்திய அணியின் கேப்டனாக அஜிங்க்ய ரஹானே உள்ளார். ஆப்கானிஸ்தான் அணி அஸ்கார் ஸ்டானிக்ஸாய் தலைமையில் களமிறங்கியுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 
அதன்படி இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய தவான் சதம் அடித்தார். 96 பந்துகளை சந்தித்த அவர் 107 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் முரளி விஜய் 61 ரன்களுடனும், லோகேஷ் ராகுல் 1 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.