தொடர்புடைய செய்திகள்
- ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!
- நானும் படத்தில் ஒரு கதாபாத்திரம்தான்… லப்பர் பந்து படத்தைப் பாராட்டிய வெற்றிமாறன்!
- மளமளவென விழுகும் இந்திய விக்கெட்டுக்கள்.. 2ஆம் நாள் முடிவில் ஸ்கோர் என்ன?
- வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.
- இந்தியா - வங்கதேச கிரிக்கெட் தொடரை தடை செய்ய வேண்டும்: இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!
இந்தியா - வங்கதேசம் இடையேயான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா - வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடந்து வந்தது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்களை குவித்த நிலையில் வங்கதேச அணி 149 ரன்களில் விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 287 ரன்களை குவித்த நிலையில் 515 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய வங்கதேச அணி 234 ரன்களிலேயே விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சற்று சரிவை சந்தித்தாலும் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக விளையாடி ஒரு சதம் அடித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய சுப்மன் ஜில் மற்றும் ரிஷப் பண்ட் தலா ஒரு சதம் அடித்தனர். அதுபோல முதல் இன்னிங்ஸில் பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் , இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆச்சர்யப்படுத்தினார்.
Edit by Prasanth.K