தொடர்புடைய செய்திகள்
- அஸ்வின், ஜடேஜா அபார பேட்டிங்.. முதல் நாள் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?
- பயங்கரவாதி தொடர்ந்த வழக்கில் தேவையற்ற நடவடிக்கை.! அமெரிக்காவுக்கு இந்தியா எதிர்ப்பு..!!
- அஸ்வின் சதம், ஜடேஜா அரைசதம்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!
- சார்மிங் ஸ்டார் ஷர்வா, பிளாக்பஸ்டர் மேக்கர் சம்பத் நந்தி, கே.கே.ராதாமோகன், ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் இணையும் பான் இந்தியா திரைப்படம் "Sharwa38"
- ஸ்டெடி பர்மிட்’ அனுமதியை குறைக்கும் கனடா அரசு.. இந்தியர்களுக்கு பாதிப்பா?
இந்தியா - வங்கதேச கிரிக்கெட் தொடரை தடை செய்ய வேண்டும்: இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
சென்னையில் இந்தியா - வங்கதேசம் இடையிலான கிரிக்கெட் தொடரை உடனடியாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை தாங்கினார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வங்கதேச மக்களை பாகிஸ்தான் அடக்குமுறைக்கு உள்ளாக்கியபோது, இந்திய ராணுவம் தலையிட்டு வங்கதேசம் என்ற நாட்டை உருவாக்க உதவியது. அப்போது அங்கு 26 சதவீதம் இந்துக்கள் இருந்தனர், இன்று அந்த எண்ணிக்கை 7 சதவீதமாக குறைந்துள்ளது, மேலும் அவர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்" என்றார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் வங்கதேசத்துடன் போட்டி நடத்துவது அசிங்கமானது, எனவே உடனடியாக தொடரை தடை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதன்பின், இந்து மக்கள் கட்சியினர் கிரிக்கெட் போட்டியை தடை செய்ய கோரி, கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
