ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (15:19 IST)

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே சென்னையில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், வங்கதேசத்தின் நான்கு பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை பும்ரா வீழ்த்தி உள்ள நிலையில் வங்கதேச அணி குறைந்த ஸ்கோரில் முதல் இன்னிங்ஸில் சுருண்டது.
 
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 376 ரன்கள் எடுத்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் அபாரமாக விளையாடி 113 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
 
இதையடுத்து வங்கதேச அணி தனது முதல் இன்னிங்சை இன்று தொடங்கியபோது, முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்தது, அதன்பின் தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டு வந்த நிலைய்ல் வங்கதேச அணி 47.1 ஓவர்களில் 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களும் வீழ்ந்தது.
 
பும்ரா சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்,  ஆகாஷ் தீப், மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். முகமது சிராஜ் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். 
 
இன்னும் சில நிமிடங்களில் வங்கதேசத்தின் முதல் இன்னிங்ஸ் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது."
 
Edited by Siva