ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 21 செப்டம்பர் 2024 (11:52 IST)

நானும் படத்தில் ஒரு கதாபாத்திரம்தான்… லப்பர் பந்து படத்தைப் பாராட்டிய வெற்றிமாறன்!

தற்போது வளர்ந்துவரும் நடிகர்கள் கண்டிப்பாக வித்தியாசமாக ஏதாவது கதைக்களங்களில் நடித்துதான் ஹிட் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர்.. இந்நிலையில் இப்படி ஒரு படமாக உருவாகி ரிலீஸாகியுள்ளது ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள லப்பர் பந்து திரைப்படம்.

இந்த படத்தில் கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி சீரிஸில் நடித்து புகழடைந்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடிக்க, இயக்குனர் அருண்ராஜா காமராஜின் இணை இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார்.  பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.

படம் வெளியானதில் இருந்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. நேற்று ரிலீஸான 6 படங்களில் லப்பர் பந்து திரைப்படம்தான் ரசிகர்களை அதிகளவில் தியேட்டர்களுக்கு இழுத்துள்ளது. இந்நிலையில் படத்தைப் பார்த்துள்ள இயக்குனர் வெற்றிமாறன் “படத்தின் எழுத்தாளர், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் என அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளார். இந்த படத்தைப் பார்க்கும்போது ஊரில் நான் நடத்திய கிரிக்கெட் அணிதான் ஞாபகத்துக்கு வருகிறது. இந்த படத்தில் நானும் ஒரு கதாபாத்திரம்தான். அனைவருக்குமான படம்தான் லப்பர் பந்து” எனக் கூறியுள்ளார்.