வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By VM
Last Modified: திங்கள், 4 மார்ச் 2019 (11:12 IST)

தோனியை பார்த்தா போது பயமே ஓடிடும்! புகழும் இந்திய வீரர்!

தோனி களத்தில் இருந்தால் பயம் ஓடிப்போய்  நம்பிக்கை வந்திடும் என இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
 



ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில்  இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  
 
ஆஸ்திரேலிய அணி 237 ரன்களை இலக்காக நிர்ணயித்து இருந்தது. இந்த இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 100 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தவித்து வந்தது. அப்போது தோனியும், ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவும் இணைந்து  கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரில் வெற்றி பெற் வைத்தனர்.  6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் தோனி 59 ரன்களும்,  9 பவுண்டரி, ஒரு சிக்சருடன்  கேதர் ஜாதவ் 81 ரன்களும் எடுத்தனர்.
 
 இந்த போட்டியில் கேதர் ஜாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேதர் ஜாதவ்,  தோனியின் ஆட்டத்தை டிவியில் பார்த்து வளர்ந்தவன் நான். அவருடன் இணைந்து பேட்டிங் செய்த அனுபவம் சிறப்பாக இருந்தது.   தற்போது தோனியுடன் சேர்ந்து இந்திய அணியை வெற்றி பெற வைக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது. எனது கனவு நனவானதில் இதை விட பெரிது என்ன இருக்கப்போகிறது. இதன் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணருகிறேன். இலக்கை எட்ட முடியுமா? என்று துளியும் கவலைப்படவில்லை. தோனி எதிர்முனையில் நிற்கும் போது, அவரைப் பார்த்தாலே நிறைய நம்பிக்கை வந்து விடும். இதே போல், ‘நீங்கள் உடன் இருந்தால் தானாகவே எல்லாம் சரியாக நடக்கும்’  இதனை அவரிடமே நான் சொல்லியிருக்கிறேன் என்றார்.