செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2019 (17:20 IST)

பயிற்சியின் போது காயம்! ஒருநாள் போட்டியில் தோனி விளையாடுவாரா ?

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை ஐதராபாத்தில் நடக்கிறது. 
இப்போட்டியில் விளையாட இந்திய அணி வீரர்கள் இன்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் முன்னாள் கேப்டனான தோனி இன்று வலை பயிற்சியில் மேற்கொண்டிருந்தார்.
 
அப்போது இந்திய அணியின் சப்போர்ட் ஸ்டாப்பான ராகவேந்திர பந்து வீசிய தோனியின் வலது கையில் பட்டது. இதனையடுத்து  அவரது கை பலமாக அடிபட்டதால் அப்போதே தன் பயிற்சியை நிறுத்திக் கொண்டார்.
 
இந்நிலையில் நாளை நடக்கும் முதல் போட்டியில் தோனி விளையாடுவாரா மாட்டாரா  என்பது சந்தேகமே என்று தகவல் தெரிவிக்கிறன.