செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 2 மார்ச் 2019 (13:45 IST)

டாஸ் வென்ற ஆஸி முதலில் பேட்டிங் – உற்சாகத்தில் தோனி ரசிகர்கள் !

இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி அணி டி 20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி 20 தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸி அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரின் முதல் போட்டி இன்று தொடங்குகிறது.

ஹைதராபாத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கும் இந்த போட்டியில் ஆஸி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயிற்சியின் போது காயமடைந்ததால் விளையாடுவாரா என்ற சந்தேகத்தில் இருந்த தோனி விளையாடுவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

இந்திய அணி விவரம்:
விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், ராயுடு, கேதார் ஜாதவ், தோனி, விஜய் சங்கர், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா


ஆஸி அணி விவரம்
ஆரோன் பிஞ்ச், கவாஜா, ஸ்டாய்னஸ், ஹான்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், டர்னர், அலெக்ஸ் கேரி, கூல்டர் நைல், பேட் கம்மின்ஸ், ஆடம் சாம்பா, பெஹண்டார்ஃப்