1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 18 செப்டம்பர் 2025 (08:38 IST)

ஆசியக் கோப்பை: மீண்டும் இந்தியா பாகிஸ்தான் போட்டி… தேதி அறிவிப்பு!

ஆசியக் கோப்பை: மீண்டும் இந்தியா பாகிஸ்தான் போட்டி… தேதி அறிவிப்பு!
ஆசியக் கோப்பை தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் முடிந்து சூப்பர் நான்கு சுற்றுகள் தொடங்கவுள்ளன. இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்றான இந்தியா- பாகிஸ்தான் போட்டி சில தினங்களுக்கு முன்னர் பரபரப்பில்லாமல் ஒருதலைபட்சமாக முடிந்தது. ஆனால் போட்டியில் நடந்த இன்னொரு சம்பவம்தான் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இந்த போட்டி முடிந்ததும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.

இந்திய பேட்ஸ்மேன்கள் போட்டி முடிந்ததும் பாக் வீரர்களோடு கைகுலுக்காமல் நேரடியாக பெவிலியனுக்குத் திரும்பினர். அதே போல டாஸ் போட்டபோதும் இரு அணிக் கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. கிரிக்கெட் போட்டிகள் முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது நூறாண்டு காலமாக நீடித்து வரும் வழக்கம்.

இந்த சர்ச்சைகள் இன்னும் ஓயாத நிலையில் மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் நான்கு சுற்றுக்கு இரு அணிகளுமே தகுதி பெற்று விட்ட நிலையில் செப்டம்பர் 21 ஆம் தேதி இரு அணிகளும் மீண்டும் மோதவுள்ளன.