செவ்வாய், 6 ஜூன் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified புதன், 25 ஜனவரி 2023 (16:05 IST)

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் முதலிடம்

india won wi
ஐசிசி தரவரிசைப் பட்டியலில், இந்திய கிரிக்கெட் வீரர்  சிராஜ் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக  நடந்த  3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியது.

நேற்றைய போட்டியில், இந்துய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று, ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.

பந்து வீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சிராஜ் முதல் இடம் வகிக்கிறார்.

 
ALSO READ: 3rd ODI- நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி!

ஒரு நாள் பேட்ஸ்மேன் கள் வரிசையில், பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்க வீரர் வான் டுசென் 2வது இடத்திலும், டிகாக் 3 வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய வீரர் கோலி 7 வத் இடத்திற்கு முன்னேறினார்.  நேற்றைய போட்டியில் சதம் அடித்ததால், இந்திய கேப்டன் ரோஹித்சர்மா தரவரிசையில் முன்னேறியுள்ளார்.