1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Hardhik pandya said that team started practice for 2024 world cup

2024 உலகக் கோப்பைக்கு இப்பவே பயிற்சி தொடங்கியாச்சு… ஹர்திக் பாண்ட்யா நம்பிக்கை!

சுனில் கவாஸ்கர்
இந்திய அணியின் அரை இறுதி தோல்விக்குப் பிறகு புதிய கேப்டன் பற்றிய பேச்சுகள் எழுந்துள்ளன.

உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியோடு  வெளியேறிய இந்திய அணியை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் ரோஹித் ஷர்மாவை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமிக்க வேண்டுமென்றும் பல முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். மேலும் பல புதிய கேப்டன்களுக்கானா விவாதங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் இப்போது நியுசிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடருக்கு தலைமையேற்றுள்ள ஹர்திக் பாண்ட்யா, அடுத்து 2024 ஆம் ஆண்டு நடக்கும் டி 20 உலகக்கோப்பை தொடருக்கு இப்போது இருந்தே பயிற்சி போட்டிகள் தொடங்கி விட்டதாகக் கூறியுள்ளார்.

ஹர்திக் பாண்ட்யா தான் தலைமையேற்ற முதல் ஐபிஎல் தொடரிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
“கோலி போல பாபர் அசாம் இல்லை… அவர் பிடிவாதக் காரர்”- விமர்சித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்!