ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாவதில் ஒரு சிக்கல் இருக்கு… இர்பான் பதான் கருத்து
உலக கோப்பை டி20 அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து – இந்தியா அணிகள் போட்டியிட்டன. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் விக்கெட்டே இழக்காமல் 16 ஓவர்களில் 170 ரன்களை குவித்து வெற்றியை கைப்பற்றினர்.
இதையடுத்து உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய இந்திய அணியை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் ரோஹித் ஷர்மாவை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமிக்க வேண்டுமென்றும் பல முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் இந்த கருத்துக்கு இர்பான் பதான் ஆட்சேபணை தெரிவித்து வருகிறார். அதற்கு அவர் “ஹர்திக் பாண்ட்யா சிறந்த கேப்டன். அவர் ஐபிஎல் கோப்பையை வென்று தந்துள்ளார். ஆனால் அவர் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர். அவருக்கு காயம் சார்ந்த சில பிரச்சனைகள் உள்ளன. அதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அவர் உலகக்கோப்பைத் தொடரின் போது காயம் அடைந்து வெளியேறினால் என்ன செய்வது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.