1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Michael Clarke reply to moeen ali on tight schedule

“ஐபிஎல் விளையாடணும் என்றால் சிணுங்க மாட்டார்கள்…” மொயின் அலிக்கு கிளார்க் பதிலடி!

இந்தியா
சமீபத்தில் நடந்து முடிந்த டி 20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றிருந்தது.

இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை விளையாடிவிட்டுதான் சொந்த நாட்டுக்கு திரும்புகிறது. இறுதிப் போட்டி முடிந்த அடுத்த மூன்று நாட்களுக்குள்ளாகவே அடுத்த தொடரில் விளையாட இருப்பது குறித்து இங்கிலாந்து வீரர் மொயின் அலி அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இதற்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ” உலகக்கோப்பை முடிந்து அடுத்த நாளே ஐபிஎல் தொடருக்கு செல்லவேண்டும் என்று சொன்னால் யாரும் இப்படி சிணுங்க மாட்டார்கள். பணத்திற்காக லீக் தொடர்களில் ஆடும் வீரர்கள் சர்வதேச அட்டவணையைக் குறை சொல்லக் கூடாது.” எனப் பதிலடி கொடுத்துள்ளார். 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
2024 உலகக் கோப்பைக்கு இப்பவே பயிற்சி தொடங்கியாச்சு… ஹர்திக் பாண்ட்யா நம்பிக்கை!