திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 17 நவம்பர் 2022 (08:35 IST)

இந்தியா முழுவதும் ஒட்டுமொத்த வசூலே இவ்வளவுதான்… அக்‌ஷய் குமாரின் அடுத்த தோல்விப் படம்!

இயக்குனர் அபிஷேக் சர்மா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள படம் ‘ராம் சேது’. இந்த படத்தில் சத்யதேவ், நாசர், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தனுஷ்கோடி அருகே உள்ள ராமர் பாலத்தை இடிக்க அரசு உத்தரவிட்ட நிலையில் அங்கு ராமர் பாலம் இருந்ததற்கான ஆதாரத்தை ராமாயண இதிகாசத்தை கொண்டு கண்டுபிடிக்க ஆய்வாளர் குழு ஒன்று செல்கிறது. அந்த குழுவின் தலைவராக அக்‌ஷய் குமார் செல்கிறார்.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. நல்ல ஓப்பனிங் கிடைத்தது. ஆனாலும் தொடர்ந்து அந்த வசூலை இந்த படம் தக்கவைக்கவில்லை. இதனால் ஒரு வாரத்தில் 55 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. அதுமட்டுமில்லாமல் ஒட்டுமொத்தமாக திரையரங்குகள் மூலமாக 73 கோடி ரூபாய் மட்டுமே இந்த படம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த ஆண்டு வெளியான அக்‌ஷய் குமாரின் தோல்வி படங்களின் வரிசையில் ராம் சேது படமும் இணைந்துள்ளது.