தொடர்புடைய செய்திகள்
- பும்ரா இல்லன்னா இந்திய பவுலிங் ஜீரோ… கிண்டல் செய்த பாகிஸ்தான் வீரர்!
- பும்ரா இருக்கும்போது வேறு யார சொல்ல முடியும்… தோனியின் பேவரைட் பவுலர்!
- வீரர்களை திட்டியதால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ்… இது எப்ப?
- டெஸ்ட் போட்டிகளிலும் துணைக் கேப்டன் பொறுப்பு… ஷுப்மன் கில்தான் எதிர்கால கேப்டனா?
- இலங்கைக்கு எதிரான முதல் டி 20 ஆட்டம்… இந்திய அணியில் ஆடப்போகும் ப்ளேயிங் 11 என்ன?
அப்ப ஈசால கப் நம்தேதானா?… RCB அணிக்கு வருகிறாரா ஹர்திக்?
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சொந்த அணி ரசிகர்களாலேயே கேலி செய்யப்பட்ட வீரராக ஹர்திக் பாண்ட்யா இருந்தார். அவர் ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக மும்பை அணிக்குக் கேப்டனாக்கப் பட்டது சர்ச்சைகளை உருவாக்கியது. ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் அவரைக் கடுமையாக கேலி செய்ய தொடங்கினர். அவர் டாஸ் போட வரும்போது கூட ரசிகர்கள் அவரை கூச்சல் போட்டு அவமானப்படுத்தினர். ஆனால் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதும் அனைத்தும் தலைகீழாக மாறியது.
ஆனால் இப்போது மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்ட்யாவை அணியில் இருந்து கழட்டிவிட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அவர்கள் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ்வை நியமிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா, ஆர் சி பி அணிக்குத் தாவ முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கே எல் ராகுல் ஆர் சி பி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட போகிறார் என்ற தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்