1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Junaid khan said without bumrah Indian bowling unit is zero

பும்ரா இல்லன்னா இந்திய பவுலிங் ஜீரோ… கிண்டல் செய்த பாகிஸ்தான் வீரர்!

இந்திய அணி தோல்வி
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. டி 20 உலகக் கோப்பையை வென்ற ஒருமாதத்துக்குள்ளாகவே முழு பலம் கொண்ட இந்திய அணி இலங்கையிடம் தொடரை இழந்திருப்பது இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் 27 ஆண்டுகளாக இலங்கையிடம் ஒருநாள் தொடரை இழந்ததில்லை என்ற பெருமையை இந்திய அணி இழந்துள்ளது. இந்த தொடரில் பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் வீரர்கள் சொதப்பினர். குறிப்பாக பேட்டிங்கில் ரோஹித் ஷர்மாவைத் தவிர வேறு யாருமே சரியாக விளையாடவில்லை. ரோஹித் ஷர்மா அவுட் ஆனதும் இந்திய அணியின் பேட்டிங் சீர்குலைவது மூன்று போட்டிகளிலும் தொடர்ந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜுனைத் கான் “பும்ரா இல்லையென்றால் இந்திய் அணியின் பவுலிங் யூனிட் ஜீரோதான்… நான் சொல்வதை ஒப்புக் கொள்கிறீர்களா?” எனக் கேட்டுள்ளார். அதில் பல இந்திய பாகிஸ்தான் ரசிகர்கள் “நீங்கள் சொல்லும் கருத்து உண்மைதான்” எனப் பதிவிட்டு வருகின்றனர்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
வினேஷ் போகத்துக்கு வெள்ளிப்பதக்கம் அளிக்க வேண்டும்: அமெரிக்க வீரர்கள் கோரிக்கை..!