தொடர்புடைய செய்திகள்
- மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் ஜி வி பிரகாஷ்…!
- கொடுத்த வாய்ப்புகளில் எல்லாம் சொதப்பல்… அடுத்த தினேஷ் கார்த்திக் ஆகிறாரா சஞ்சு சாம்சன்?
- கேப்டனாக இல்லை, தலைவனாக இருக்க ஆசைப்படுகிறேன் – சூர்யகுமார் யாதவ் பேச்சு!
- இந்தியா - இலங்கை போட்டியில் சூப்பர் ஓவர்.. த்ரில்லான முடிவு..!
- இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டி.. பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா..!
பும்ரா இருக்கும்போது வேறு யார சொல்ல முடியும்… தோனியின் பேவரைட் பவுலர்!
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார். டெஸ்ட், டி 20 மற்றும் ஒருநாள் என மூன்று வகையான போட்டிகளிலும் இப்போது இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்களில் பும்ராதான் நம்பர் 1 பவுலர் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்லலாம்.
நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் ஜாஸ்ப்ரீத் பும்ரா. அனைத்து போட்டிகளிலும் சிறப்பான பவுலிங்கின் மூலம் அணிக்கு வெற்றியை தேடித்தந்த அவர் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். இந்த தொடரில் ஒரு ரன் கூட சேர்க்காமல் அவர் தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் எதிர்காலத்தில் இந்திய அணிக்குக் கேப்டனாக வரலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் உங்களின் பேவரைட் பந்துவீச்சாளர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் “பும்ரா இருக்கும்போது வேறு யாரை சொல்லமுடியும். பவுலர்களை சொல்ல சொன்னால் மிக எளிதாக பும்ராவை சொல்லிவிடுவேன். ஆனால் பேட்ஸ்மேன் யார் என்று கேட்டால்தான் சிக்கல். ஏனென்றால் நாம் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதற்காக நம்மிடம் சிறந்த பவுலர்கள் இல்லை என்று அர்த்தமில்லை. இருப்பவர்களில் சிறந்தவராக பும்ரா தோன்றுகிறார்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்