தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவுக்கு எதிரான தொடர்… ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகல்!
- இந்திய அணியை வீழ்த்தும் மேட்ச் வின்னர்கள் பாகிஸ்தானில் உள்ளனர்… முன்னாள் வீரர் நம்பிக்கை!
- இன்று இரண்டாவது டி 20 போட்டி… வெற்றிக் கணக்கை தொடங்குமா இந்தியா?
- ’என் கைது எதிர்பார்த்ததுதான்’’ இம்ரான்கான் வீடியோ வெளியீடு
- இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே நாளை 2 வது டி-20 போட்டி
உலகக் கோப்பை தொடரில் அரையிறுதியில் இடம்பெறப் போகும் நான்கு அணிகள்… கிளன் மெக்ராத் கணிப்பு!
இந்தியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் அக்டோபர் 15 ஆம் தேதி நடக்க உள்ளது. இப்போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
இந்த முறை 10 அணிகள் உலகக்கோப்பை தொடரில் விளையாட உள்ள நிலையில் எந்தந்த அணிகள் அரையிறுதிக்கு செல்லும் அணிகளாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுபற்றி பல முன்னாள் வீரர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸி அணியின் முன்னாள் வீரர் க்ளன் மெக்ராத் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகளாக இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகியவை இருக்கும் எனக் கூறியுள்ளார். பெரும்பாலான முன்னாள் வீரர்கள் இந்த நான்கு அணிகளைதான் குறிப்பிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்