செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (08:56 IST)

இந்தியாவுக்கு எதிரான தொடர்… ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான தொடர்… ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகல்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் செப்டம்பரில் நடக்க உள்ளது. இந்த தொடருக்காக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரின் இறுதி போட்டியில் பாட் கம்மின்ஸ் காயமடைந்தார். அதனால் இந்த தொடரில் இருந்து அவர் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய தொடருக்கு முன்பாக தென்னாப்பிரிக்கா செல்லும் ஆஸி அணியின் தொடரிலும் பாட் கம்மின்ஸ் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது.