வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (08:28 IST)

இன்று இரண்டாவது டி 20 போட்டி… வெற்றிக் கணக்கை தொடங்குமா இந்தியா?

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்றுள்ளது. அடுத்து இப்போது 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெற்று வருகிறது.

இரு  அணிகளுக்கு இடையில் நடந்த முதல் டி 20 போட்டியில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்களை இழந்து 149 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஆனால் அதை துரத்திய இந்திய அணி 145 ரன்கள் மட்டுமே சேர்த்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு இரண்டாவது டி 20 போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் வென்று இளம் இந்திய அணி வெற்றிக்கணக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.