வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2023 (08:55 IST)

இந்திய அணியை வீழ்த்தும் மேட்ச் வின்னர்கள் பாகிஸ்தானில் உள்ளனர்… முன்னாள் வீரர் நம்பிக்கை!

இந்தியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் அக்டோபர் 15 ஆம் தேதி நடக்க உள்ளது. இப்போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. அரசியல் காரணங்களால் இருநாட்டு தொடர்களில் விளையாடுவதில்லை. இதனால் இவ்விரு அணிகள் விளையாடும் போட்டியைக் காண உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யுனீஸ் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தும் வல்லமை கொண்டது எனக் கூறியுள்ளார். அவரது பேச்சில் “முன்பெல்லாம் நாங்கள் இந்தியாவுடன் அதிகமான போட்டிகளில் விளையாடுவோம். அதனால் எந்த அழுத்தமும் இல்லை. ஆனால் இப்போது இந்தியாவோடு பாகிஸ்தான் அதிக போட்டிகளில் விளையாடுவதில்லை. இந்திய அணியை வெல்லும் மேட்ச் வின்னர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளனர்.” எனக் கூறியுள்ளார்.