வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 7 நவம்பர் 2024 (09:46 IST)

“RCB நிர்வாகம் என்னிடம் பேசினார்கள்… இப்படிதான் இருக்கணும்” –மேக்ஸ்வெல் பகிர்ந்த தகவல்!

டி 20 கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஆஸி நாட்டின் கிளன் மேக்ஸ்வெல். இவர் ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப், டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளுக்காக விளையாடியும் இந்திய ரசிகர்களின் விருப்பத்துக்குரிய வீரரானார்.

கடந்த மூன்று சீசன்களாக அவர் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் நடந்து முடிந்த தொடரில் அவர் மிக மோசமாக விளையாடியதால் அடுத்த சீசனில் அவரை பெங்களூர் அணி தக்கவைக்கவில்லை. இந்நிலையில் தன்னிடம் பெங்களூர் அணி நடத்திய பேச்சுவார்த்தை குறித்து மேக்ஸ்வெல் தற்போது பேசியுள்ளார்.

அதில் “ஆர் சி பி எனக்கு போன் செய்து என்னைத் தக்கவைப்பது குறித்து பேசினார்கள். அது ஒரு நீண்ட உரையாடலாக இருந்தது. ஒவ்வொரு அணியும் இவ்வாறு வீரர்களிடம் பேச வேண்டும் என நான் நினைக்கிறேன். அப்படி செய்தால் வீரர்களுக்கும் அணிக்கும் இடையிலான உறவு வலுப்படும். நான் மீண்டும் ஆர் சி பி அணிக்குத் திரும்புவேன் என நினைக்கிறேன். அப்படி நடந்தால் எனக்கு சந்தோஷம்.” எனக் கூறியுள்ளார்.