1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 6 நவம்பர் 2024 (09:25 IST)

42 வயதில் ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன்…!

42 வயதில் ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன்…!
2003 ஆம் ஆண்டு தன்னுடைய சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய ஆண்டர்சன் 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சச்சினுக்கு அடுத்தபடியாக அதிக போட்டிகள் விளையாடிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். சச்சின் டெண்டுல்கரின் அதிகபட்ச டெஸ்ட் போட்டி சாதனையை 200 டெஸ்ட் போட்டி என்ற சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த மே மாதம் அவர் தன்னுடைய ஓய்வு முடிவை வெளியிட்டார்.

டெஸ்ட் போட்டிகளில் அதிகளவில் விளையாடுவதற்காக அவர் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாடுவதைக் குறைத்துகொண்டார். அதே போல வெளிநாட்டு டி 20 லீக் போட்டிகளில் விளையாடவும் அவர் ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில் தற்போது சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் தன்னுடைய 42 ஆவது வயதில் அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாட விரும்புகிறார். டிசம்பர் மாதம் நடக்கவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்ள ஆண்டர்சன் தன்னுடைய பெயரைப் பதிவு செய்து கொண்டுள்ளார். அவரின் அடிப்படை விலை 1.25 கோடி ரூபாயாகும். அவரை ஏலத்தில் எடுக்க அணிகள் ஆர்வம் காட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.