ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 6 நவம்பர் 2024 (08:15 IST)

பாட் கம்மின்ஸுக்கு சுமைக் குறைப்பு… இவர்தான் ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டன்..!

பேட் கம்மின்ஸ் ஆஸி அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டதில் இருந்து அவர் தொட்டதெல்லாம் வெற்றியாகி வருகிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் கடந்த நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது அவர் தலைமையிலான அணி.

அதே போல அவர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி 50 ஓவர் உலகக் கோப்பையையும் வென்றது. இப்படி கம்மின்ஸ் தலைமையில் அடுத்தடுத்து சிறப்பான வெற்றிகளை ஆஸி அணி பெற்று வரும் நிலையில் இப்போது அவரிடம் இருந்து ஒருநாள் அணிக்கானக் கேப்டன்சி  பெறப்பட்டு ஜோஷ் இங்கிலிஷ் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜோஷ் இங்லீஷ் டி 20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கானக் கேப்டனாக செயல்பட, கம்மின்ஸ் டெஸ்ட் அணிக்கான கேப்டனாக தொடரவுள்ளார். டிசம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.