1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Gautham gambhir comment on ishan kishan

இஷான் கிஷானை உச்சி முகர்ந்து பாராட்டிய முன்னாள் இந்திய வீரர்!

இந்தியா
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இஷான் கிஷான் 130 பந்துகளில் 210 ரன்கள் அடித்து உள்ளார் என்பதும் அதில் 24 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்கள் அடங்கும்.

அவர் 126 பந்துகளில் 200 ரன்கள் சேர்த்தார். இதுவரை அடிக்கப்பட்ட இரட்டை சதங்களிலேயே  இதுதான் அதிவேக சதம். அதுமட்டுமில்லாமல் இஷான் கிஷான் தன்னுடைய முதல் சர்வதேச சததத்தையே இரட்டை சதமாக மாற்றிய பெருமை இஷான் கிஷானையே சேரும்.

இந்நிலையில் இப்போது இலங்கைக்கு எதிரான தொடரில்  ஷிகார் தவானுக்குப் பதில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பேசியுள்ள கௌதம் கம்பீர் “ஒருநாள் போட்டிகளில் இரட்டைசதம் அடிப்பது எளிதானது இல்லை. அதுவும் 35 ஓவர்களில் 200 ரன்கள் சேர்த்தார் இஷான் கிஷான். அவர் நிதானமாக விளையாடவும் கூடியவர். அதனால் கண்டிப்பாக ரோஹித் ஷர்மாவோடு அவர்தான் தொடக்க ஆட்டக்காரராக விளையாட வேண்டும்.” எனக் கூறியுள்ளார். 
 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
செளதிஅரேபியா கிளப்பில் இணைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!