1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 30 டிசம்பர் 2022 (19:02 IST)

நாங்கள் என்ன இந்தியாவின் பணியாளர்களா? ரமீஸ் ராஜா ஆவேசம்

rameez
நாங்கள் என்ன இந்தியாவின் பணியாளர்களா?  என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெற இருப்பதை அடுத்து இந்த போட்டியில் இந்தியா கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் இது குறித்து ரமீஸ் ராஜா கூறியபோது பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டோம் என்றும் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் இந்தியா கூறுவதை பார்க்கும் போது நாங்கள் என்ன இந்தியாவின் பணியாளர்களா?  என்றுதான் கேள்வி எழுப்ப வேண்டியிருக்கிறது
 
 அவர்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் கேட்க வேண்டுமா? என்றும் அவர் ஆவேசமாக தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது சிறப்பாக விளையாடி வருவதாகவும் வீரர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva