வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinioj
Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2022 (23:24 IST)

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் இவர்தான்!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரஷித்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் கைகளுக்குச் சென்றபோது, இனிமேல் கிரிக்கெட் அங்கு இருக்காது என்று கூறப்பட்டது.

ஆனால், சமீபத்தில்  நடந்த டி-20 உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் கலந்துகொண்டது.

இதில், அந்த அணி தோற்றாலும் வீரர்களின் முயற்சி பாராட்டப்பட்டது.

இத்தோல்வி எதிரொலியால் கேப்டன் பொறுப்பில் இருந்து முகமது நபி விலகினார்.

இந்த நிலையில், ஆஃப்கான் அணியின் புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் ரஷித்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒவர் 5 டெஸ்ட்டிலும், 86 ஒருநாள் போட்டிகளிலும், 74 டி-20 போட்டிகளிலும் விளையாடியவர் ஆவார்.

இவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.