வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 17 ஜூன் 2024 (07:45 IST)

ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!

இந்த உலகக் கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி விளையாடிய மூன்று போட்டிகளிலும் சேர்த்து 5 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.  அமெரிக்காவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். இது அவர் மேல் கடுமையான விமர்சனங்களை எழவைத்துள்ளது. இதனால் அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காமல் வழக்கம் போல அவரது இடத்தில் மூன்றாவது பேட்ஸ்மேனாகவே களமிறங்க வேண்டும் எனப் பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கோலி மீது விமர்சனங்கள் எழும் அதே வேளையில் அவருக்கு ஆதரவான குரல்களும் எழுந்துள்ளன. முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பேசும்போது “சூப்பர் 8 போட்டிகளிலும் விராட் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரே தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்க வேண்டும். ஜெய்ஸ்வாலை உள்ளே கொண்டுவந்தால் மொத்த பேட்டிங் ஆர்டரும் குழம்பிவிடும்” எனப் பேசியுள்ளார்.

இதே போல கோலிக்கு ஆதரவாக இந்த அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் பேசும்போது, “நியுயார்க் மைதானத்தில் கோலி மட்டுமில்லை, வேறு யாருமே பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டிகள் தொடங்கும் போது இன்னும் அழுத்தம் அதிகமாகும். அப்போது கோலியிடம் இருந்து ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வரும் என நான் நம்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.