தொடர்புடைய செய்திகள்
- இந்திய அணிக்கு பயிற்சியாளராகும் தகுதி கம்பீருக்கு…? கும்ப்ளே கருத்து!
- கோலி மட்டுமா யாருமே அந்த மைதானத்தில் ரன்கள் சேர்க்கவில்லை- ஆதரவுக் குரல் தெரிவித்த முன்னாள் பயிற்சியாளர்!
- கோலியைப் பற்றி பேச நான் யார்… அவர் மூன்று போட்டிகளில் ரன் அடிக்கவில்லை என்றால்…? –ஷிவம் துபே பதில்!
- வீரர்கள் இப்படிதான் தேர்வு செய்யப்பட வேண்டும்… யோ யோ டெஸ்ட் வைத்தல்ல – கம்பீர் கருத்து!
- மீண்டும் வெற்றிப்பாதையில் கோலிவுட் திரையுலகம்.. மூன்று படங்கள் தொடர் வெற்றி..!
கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்க்ததா அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு அந்த அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ள கம்பீர், “இந்திய அணிக்கு பயிற்சி அளிப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன். அதை விட பெரியது வேறு எதுவுமே இல்லை என நினைக்கிறேன். நான் பயிற்சியாளராக ஆனால் 140 கோடி இந்திய மக்களின் பிரதிநிதியாக இருப்பேன். ” எனப் பேசியுள்ளார். இதன் மூலம் அவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் கம்பீர் பதவியேற்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக சொல்லப்படும் நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் இறுதியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.