தொடர்புடைய செய்திகள்
- ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!
- கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்
- இந்திய அணிக்கு பயிற்சியாளராகும் தகுதி கம்பீருக்கு…? கும்ப்ளே கருத்து!
- கோலி மட்டுமா யாருமே அந்த மைதானத்தில் ரன்கள் சேர்க்கவில்லை- ஆதரவுக் குரல் தெரிவித்த முன்னாள் பயிற்சியாளர்!
- கோலியைப் பற்றி பேச நான் யார்… அவர் மூன்று போட்டிகளில் ரன் அடிக்கவில்லை என்றால்…? –ஷிவம் துபே பதில்!
இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வெளிநாட்டு முன்னாள் வீரர்?
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்க்ததா அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு அந்த அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் டிராவிட்டுக்குப் பிறகு அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் கம்பீர் பதவியேற்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக சொல்லப்படும் நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் இறுதியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜாண்ட்டி ரோட்ஸ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜாண்ட்டி ரோட்ஸ் ஃபீல்டிங் செய்வதில் ஜாம்பவான் என்று பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வருகை இந்திய அணிக்கு மேலும் வலுகூட்டும் என்பது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.