1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Gambhir talked about his friendship with jay shah

ஜெய் ஷாவோடு கருத்து வேறுபாடா…? கம்பீர் அளித்த பதில்!

கம்பீர்
டி 20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது. ஜிம்பாப்வே தொடர் முடிந்துள்ள நிலையில் அடுத்து இலங்கை சென்று டி 20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது.

இந்த தொடரில் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். இதையடுத்து அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அணி குறித்து பல விஷயங்களைப் பற்றி பேசினார். அப்போது அவருக்கும் பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷாவுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு குறித்து பேசியுள்ளார்.

அணிக்கான உதவி பயிற்சியாளர்களை நியமிப்பதில் ஜெய் ஷாவுக்கும் கம்பீருக்கும் இடையில் கருத்து வேறுபாடு எழுந்ததாக சொல்லப்படுகிறது. அதுகுறித்து பேசிய கம்பீர் “எனக்கும் ஜெய் ஷாவுக்கும் இடையிலான நட்பு பல ஆண்டுகளாக தொடர்வது. ஆனால் எங்களுக்குள் சண்டை என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. இதுபோன்ற செய்திகளுக்கு விளக்கம் அளிப்பதற்குப் பதில் வேறு விஷயங்களில் கவனம் செலுத்தலாம் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
பிசிசிஐ கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல்… ஐசிசி ஆலோசனைக் கூட்டத்தில் முடிந்த பேச்சுவார்த்தை!