திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 22 ஜூன் 2024 (16:03 IST)

11 வீரர்களுக்கும் சமமான மரியாதை… கௌதம் கம்பீர் கருத்து!

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்க்ததா அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு அந்த அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய அணிக்குப் பயிற்சியாளர் ஆவது குறித்து பேசியு கம்பீர், “இந்திய அணிக்கு பயிற்சி அளிப்பதை நான் பெரிதும் விரும்புகிறேன். அதை விட பெரியது வேறு எதுவுமே இல்லை என நினைக்கிறேன். நான் பயிற்சியாளராக ஆனால் 140 கோடி இந்திய மக்களின் பிரதிநிதியாக இருப்பேன். ” எனக் கூறியிருந்தார். இம்மாத இறுதியில் அவர் பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் இந்திய அணி பற்றி பேசியுள்ள ஒரு கருத்து கவனம் பெற்றுள்ளது. அணியில் ஒரு சில குறிப்பிட்ட வீரர்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது குறித்து பேசியுள்ள அவர் “கிரிக்கெட் போன்ற அணி சார்ந்த விளையாட்டுகளில் வீரர்களை விட அணிதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. என்னை பொறுத்தவரை 11 வீரர்களுக்கும் சமமான மரியாதையும் ஒரு பொறுப்பும் ஒரே விதமான கௌரவமும் வழங்கினால் நம்ப முடியாத வெற்றிகளைப் பெறலாம்” எனக் கூறியுள்ளார்.