1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 22 ஜூன் 2024 (15:27 IST)

அவர் இந்திய அணிக்குக் கடவுள் கொடுத்த பரிசு… அம்பாத்தி ராயுடு புகழ்ச்சி!

கடந்த ஆண்டு முழுவதும் காயத்தால் அவதிப்பட்ட பும்ரா அதன் பிறகு கம்பேக் கொடுத்து தன்னுடைய ஃபார்மை மீண்டும் பெற்று சர்வதெச போட்டிகளில் கலக்கி வருகிறார். நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில் வரின் பவுலிங் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடிய அவர் 9 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

கடைசியாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயலபட்ட அவர் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். அவருக்குதான் ஆட்டநாயகன் விருது கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் பும்ரா பற்றி பேசிய அம்பாத்தி ராயுடு “பும்ரா எப்போதும் போலவே சிறப்பாக செயல்பட்டார். அவரிடம் எந்த சூழ்நிலையில் பந்துவீசச் சொன்னாலும் அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்கிறார். அவர் இந்திய அணிக்குக் கடவுள் கொடுத்த பரிசு. அவரை காண்பதற்கு நாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.