புதன், 13 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 22 நவம்பர் 2021 (10:24 IST)

இம்ரான் கானை அண்ணன் என அழைப்பதா? நவ்ஜோத் சிங்குக்கு கம்பீர் கண்டனம்!

பாகிஸ்தானுக்கு சென்று அங்கு புனித தலத்தில் வழிபாடு செய்தார் நவ்ஜோத் சிங்.

பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் நவ்ஜோத் சிங். விரைவில் அங்கு மாநிலத் தேர்தல் நடக்க உள்ளதால் பஞ்சாப்பில் அரசியல் களம் பறபறப்பாக உள்ளது. இந்நிலையில் சித்து நேற்று முன்தினம் பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா புனிதத்தலத்துக்கு வழிபாடு செய்யச் சென்றார். 

அப்போது அவரை பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானின் உத்தரவை ஏற்று வரவேற்றனர். அங்கு வழிபாடு செய்த சித்து பின்னர் இம்ரான் கானை தன்னுடைய பெரிய அண்ணன் என்று கூறினார். இது இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினர் இதை வைத்து காங்கிரஸ் மீது விமர்சனம் செய்து வருகின்றனர்.

பாஜக எம்பி கவுதம் கம்பீர் ‘கடந்த ஒரு மாதத்தில் காஷ்மீரில் 35க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து சித்து கருத்து எதுவும் கூறவில்லை. இந்தியாவை பாதுகாக்க விரும்பும் மக்களுக்கு எதிராக அவர் செயல்படுகிறார். சித்து தன் பிள்ளைகளை எல்லைக்கு அனுப்ப வேண்டும். அப்போது அவர் இம்ரான் கானை தன் அண்ணன் என அழைப்பாரா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.