செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 5 நவம்பர் 2021 (18:42 IST)

‘அண்ணாத்த’ படத்தை ரசித்து பார்த்த ஷாலினி அஜித்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படம் ஒரே நாளில் 35 கோடி வசூல் செய்ததாகவும் இன்றும் பல நகரங்களில் உள்ள திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது 
 
‘அண்ணாத்த’ படத்திற்கு ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் அந்த விமர்சனங்கள் எந்த விதத்திலும் ‘அண்ணாத்த’ படத்தின் வசூலை பாதிக்கவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் தல அஜித்தின் மனைவி ஷாலினி அஜீத் இன்று சென்னை சத்யம் திரையரங்கில் ‘அண்ணாத்த’ படத்தை பார்த்தார் அவர் தனது மகன் ஆத்விக் உடன் ‘அண்ணாத்த’ படம் பார்த்ததாகவும் அவர் படம் முழுவதும் ரசித்து பார்த்ததாகவும் அருகிலிருந்து படம் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது