புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 13 நவம்பர் 2021 (10:23 IST)

அந்த ஷாட் அவமானச் சின்னம்… வார்னரை விமர்சித்த கம்பீர்!

அரையிறுதிப் போட்டியில் டெட் பாலில் சிக்ஸ் அடித்த வார்னரை கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி நேற்று முன் தினம் நடந்தது. அதில் ஆஸி அணி சிறப்பான வெற்றியைப் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடி 49 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

போட்டியில் முகமது ஹபீஸ் வீசிய பந்து இரண்டு முறை பிட்ச் ஆகி டெட் பாலாக வந்தது. அந்த பந்தை துரத்தி அடித்த வார்னர அதை சிக்ஸருக்கு அனுப்பினார். ஆனால் இந்த ஷாட் ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட்டை கெடுப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விமர்சனம் செய்துள்ளார். மேலும் மன்கட் முறையில் விக்கெட் எடுத்த போது அஸ்வினை விமர்சித்த ஆஸியின் ஷேன் வார்ன் மற்றும் ரிக்கி பாண்டிங்கை ஆகியோரை டேக் செய்து இதுபற்றி எதுவும் பேச மாட்டீர்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.