வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 பிப்ரவரி 2024 (14:53 IST)

இங்கிலாந்துடன் இறுதி டெஸ்ட் போட்டி! – இந்திய அணியில் யார்? யார்? வெளியானது பட்டியல்!

india won
இங்கிலாந்து – இந்தியா இடையேயான 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் முதலில் நடந்த 4 போட்டிகளில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் தரம்சாலாவில் நடைபெற உள்ள 5வது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா இங்கிலாந்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து எதிராக 5வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரோஹித் சர்மா(C), ஜஸ்பிரித் பும்ரா (VC), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (WK), கேஎஸ் பாரத் (WK), தேவ்தத் படிக்கல், ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் , முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

4வது டெஸ்ட்டில் விடுவிக்கப்பட்ட பும்ரா திரும்ப வந்துள்ள நிலையில் இந்தியா பவுலிங்கில் இங்கிலாந்தை நிலைக்குலைய செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K