1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (13:01 IST)

“நீ எறங்கி ஆடு.. இது நம்ம காலம்!” - மீண்டும் இரட்டை சதம் அடித்த ஜெய்ஸ்வால்!

jaiswal
இங்கிலாந்து – இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்



இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. முதலில் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று ட்ராவில் உள்ளன. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வருகிறது.

முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்த இந்திய அணி இங்கிலாந்தை 319ல் மடக்கியது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் இரண்டாவது இன்னிங்ஸில் 380 ரன்களை கடந்துள்ள இந்திய அணி 500+ ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை விட முன்னிலையில் உள்ளது.

இந்த இன்னிங்ஸில் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால் 231 பந்துகளில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால் அடிக்கும் இரண்டாவது சதம் ஆகும். அதுபோல இந்த டெஸ்டில் அதிகபட்சமாக 10 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் அடித்துள்ளார் ஜெய்ஸ்வால். அதுபோல இந்திய டெஸ்ட்டில் முதல் முறையாக களம் இறங்கியுள்ள சர்ப்ராஸ் கான் 50 ரன்கள் அடித்து அட்டகாசம் செய்துள்ளார். ஜெய்ஸ்வால் மற்றும் சர்ப்ராஸ் கானின் சிறப்பான ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்களும், கிரிக்கெட் பிரபலங்லளும் பாராட்டி வருகின்றனர்.

Edit by Prasanth.K